சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு

Photo of author

By Parthipan K

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு

Parthipan K

Updated on:

Chennai Guindy Childrens Park Closure Order of Tamil Govt

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்! தமிழக அரசு உத்தரவு

சென்னை மாநகரத்தின் கிண்டியில்  சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் இது தேசிய சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டது. தமிழகத்தில்  பல சுற்றுலா தலங்கள் இருந்தாலும் இது மிகவும் பிரபலமானது.

இது பெரும்பாலான மக்களின் மிக முக்கியமான பொழுது போக்கு  இடமாக திகழ்கிறது.இந்த பூங்காவில் மான் , புலி , நரி , சிங்கம் , முதலை, அணில் , முயல் , பாம்பு, கரடி , எலி போன்ற பல வன உயிர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

விடுமுறையில் இந்த பூங்காவிற்கு குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் போன்றோர் வருகை தருவார்கள்.மேலும் இந்த பூங்காவை சர்வதேச தரத்தில் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பொலிவை இழந்து இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவை மீண்டும் சரி செய்து சர்வதேச தரத்தில் மிக சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் படி இந்த பூங்காவை ஜூன் 19 ம் தேதி முதல்  6 மாதங்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது.

அதனையடுத்து பூங்காவில் சிறுவர்களுக்கு ஏதுவாக வாட்டர் கேம்ஸ்,பொதுமக்கள்  உடற்பயிற்சி செய்யவதற்கு என்று தனி இடமும் , அதிக அளவில் பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை ஜூன் 19 ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு மூடி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.