பெண்களுக்கு நிலம் கொடுக்கும் தமிழக அரசு!! மானியத்துடன் உதவித்தொகை கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Rupa

 

பெண்களே நீங்கள் நிலம் வாங்க மானியத்துடன் உதவித் தொகை கிடைக்கும்! தமிழக அரசு அறிவித்த புதிய திட்டம்!

பெண்கள் விவசாயம் தொடர்பாக நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் உதவித் தொகை வழங்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பெண்கள் விவசாயம் நிலம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது பெண்களின் முன்னேற்றத்திற்காக பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பெண்கள் நிலம் வாங்குவதற்காக தமிழக அரசு தற்பொழுது நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கான திட்டம் ஆகும். பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக அரசு சார்பாக பணம் வழங்கப்பட உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் மூலமாக பெண்கள் விவசாய நிலம் வாங்க திட்டச் செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிபந்தனைகள் மற்றும் தகுதிகள்…

* நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் கீழ் நிலம் வாங்க விரும்பும் பெண்கள் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே போல அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் பெண்கள் சொந்தமாக நிலம் வைத்திருக்க கூடாது. அதே போல பெண்களின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.

* இந்த திட்டத்தின் கீழ் நஞ்சை நிலமாக இருப்பின் 2.5 ஏக்கமும் புஞ்சை நிலமாக இருப்பின் 5 ஏக்கரும் வாங்கிக் கொள்ளலாம். அதே போல இந்த திட்டத்தின் நிலம் வாங்கும் பொழுது நிலத்தின் அளவு நஞ்சை நிலத்திற்கு 2.5 ஏக்கர் அளவுக்குள்ளும், புஞ்சை நிலத்திற்கு 5 ஏக்கர் அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

* இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தின் மதிப்பு சந்தை மதிப்பீட்டின் படி நிர்ணயம் செய்யப்படும்.

* இந்த திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குபவர்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

* நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மூலமாக வாங்கப்படும் நிலத்தை பத்து ஆண்டுகள் வரை விற்பனை செய்யக் கூடாது.

* விவசாய நிலம் வாங்கும் பொழுது சந்தை மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் அல்லது 5  லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

* நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் மூலமாக நிலம் வாங்க விரும்பும் பெண்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக கடன் பெற்று பின்னர் நிலம் வாங்கிக் கொள்ளலாம்.

விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியன மக்களை நில உரிமையாளர்களாக உயர்த்த வேண்டும் என்ற நேக்கத்துடனும் சமூகநீதியை நிலைநாட்டும் நோக்கத்துடனும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது இந்த திட்டத்தையும் திமுக அரசு அறிவித்துள்ளது.