அடி தூள்!! தமிழக அரசு  வங்கிக் கணக்கில்  போடும்  ரூ.1௦௦௦!! இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க!!

Photo of author

By Amutha

இனி மாணவர்களுக்கும் ரூ.1௦௦௦ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஆகஸ்டு 9 ஆம் நாள் கோவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல இனி மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில்  பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

 

6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு இந்த நிதியாண்டில் மாதந்தோறும்  ரூ. 1௦௦௦/-  வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ. 360 கோடி நிதி ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.புதுமைப்பெண் திட்டத்தில் 3.28 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுவரும் நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 3.38 லட்சம் மாணவர்கள் என கணக்கில் கொண்டு இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை ஆணையருக்கு அடுத்த நிதியாண்டில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் இத்திட்டத்திற்கு  தேவைப்படும் நிதியை ஒதுக்க கோரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.1௦௦௦/- வழங்குவதற்கான இத்திட்டத்தில் மாணவர்கள் அரசு பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றதை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்களின் ஆதார் எண்ணை சார்ந்த கல்லூரியில் இருந்து பள்ளிகல்வித்துறையில் எமிஸ் எண் மூலம் சரிபார்க்கப்படும். இணையதளத்தில் விண்ணப்பபடிவம் பதிவேற்றப்பட்டுள்ளது. பின்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக எண்  உருவாக்கப்படும். இது குறுஞ்செய்தி வாயிலாக மாணவர்களுக்கு அலைபேசி எண்ணிற்குத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்ப்  புதல்வன் திட்டத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு மேற்பட்ட மாணவர்கள் கூட இத்திட்டத்தில் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த பாடப்பிரிவில் பயிலும் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற முடியும். மேலும் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பயன் பெற முடியும். வேறு வகையான உதவித்தொகை பெற்று வரும் மாணவர்களாலும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற முடியும் என கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை படித்து ஐடிஐ படித்துகொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் பள்ளிகளில்  பயின்ற மாணவர்களும், அஞ்சல்வழி மற்றும் அங்கீகரிக்கபடாத உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது உயர்கல்வியை பயிலும் மாணவர்களால் இத்திட்டத்தின் மூலம்  பயன் பெற இயலாது.