பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

0
415
Tamilnadu government's letter to central government seeking permission for pen memorial!
Tamilnadu government's letter to central government seeking permission for pen memorial!

பேனா நினைவு சின்னம் அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழக அரசியல் என்று சொன்னவுடனே அனைவரின் நினைவிலும் வருபவர் தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காலம் சென்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராஜர், இந்திரா காந்தி, ராஜாஜி, போன்ற பெரும் தலைவர்களுடன் தனது சமகாலத்தில் அரசியல் செய்தவர் தான் கருணாநிதி.

இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி வயது மூப்பு காரணத்தினால் மரணமடைந்தார். அவரின் மறைவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது, மறைந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அன்றைய அதிமுக அரசு நீதிமன்ற உத்தரவு படி மெரினா கடற்கரையில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே 2.23 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இதனை தொடர்ந்து திமுக சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன் பின் சட்டமன்றத்தில் மறைந்த கருணாநிதிக்கு தமிழக அரசியலில் அவர் ஆற்றிய பணிகளுக்கு அவர் பயன்படுத்திய பேனாவை நினைவு சின்னமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் பெரும்பாலானோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த பேனா நினைவு சின்னம் என்பது நடு கடலில் சுமார் 134 அடி உயரத்தில் 81 கோடி செலவில்  கண்ணாடி பாலம் வழியாக மக்கள் காண்பது போல நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழக கடற்கரை மேலாண்மை வாரியம் அனுமதி வழங்கிய நிலையில் மத்திய கடற்கரை சுற்றுச்சூழல் அமைப்பு இன்னும் அனுமதி தராததால் தமிழக அரசு பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் அனுமதி வழங்க கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!
Next articleமீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்!