கொப்பளம் மற்றும் காய்ச்சல் இருந்தால் உடனே இன்பார்ம் பண்ணுங்க!! தமிழக அரசு கொடுத்த அலர்ட் !!

Photo of author

By Rupa

Mpox :குரங்கு அம்மை(Mpox) நோய் குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழக சுகாதரத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

சமீப நாட்களாக குரங்கு அம்மை (Mpox)வியாதியானது சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் தொற்று பரவலானது கனிசமான எண்ணிக்கையில் உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து மக்களுக்கு எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. மேற்கொண்டு அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம்.

குரங்கு அம்மை(Mpox ) என்றால் என்ன?

இது ஒருவகை ஜூனோடிக் வைரஸ் என கூறுகின்றனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் மற்றும் நாளடைவில் உடலில் கொப்பளங்கள் பெரிய அளவில் காணப்படும்.

முதலில் குரங்கு அம்மை (Mpox ) எப்படி பரவுகிறது?

இந்த குரங்கு அம்மையானது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது. குரங்கம்மை பாதித்தவர்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் காணப்படும். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் தோல் மீது நமது தோல் உரசினால் கூட இது மற்றவருக்கும் தொற்றிவிடும் அபாயம் உள்ளது.
மேற்கொண்டு குரங்கம்மை இருப்பது அறியாமல் உடலுறவு வைத்துக் கொள்வது, அவர்களின் மூச்சுக்காற்று உள்ளிட்டவை மூலம் பரவும்.

குரங்கு அம்மை (Mpox ) நோயிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருக்கும் பொழுது கைகுலுக்குவது, உணவுகளை பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவற்றை செய்யாமல் இருக்கலாம்.
தங்களின் பாதுகாப்பிற்கிணங்க முக கவசம் அணிந்தும் கொள்ளலாம்.

இந்த குரங்கம்மை நோய் வந்து விட்டால் கிட்டத்தட்ட முழுமையாக குணமடைய ஒரு மாத காலமாகும். இது குறித்த அறிகுறிகளுடன் யாரேனும் தென்பட்டால் கட்டாயம் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.