பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!
பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள தமிழக பாஜகவின் மாநில தலைவர் பதவியும் இன்று நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்பு, தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக 2014 ஆண்டு முதல் தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் தெலுங்கானாவின் மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதால், தமிழக பாஜக மாநில தலைவர் பதவி காலியானது.

இதையடுத்து, கட்சியில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக உள்கட்சி தேர்தலை நடத்த பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டதால் மாவட்ட தலைவர்களும், சில மாநில தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். தென் மாநிலமான தமிழகம், தெலுங்கானா மாநிலங்களுக்கான தலைவர் அறிவிப்பு மட்டும் வந்தபாடில்லை.

பல நாட்கள் இழுபறியாக இருந்த, தமிழக மாநில தலைவர் பதவிக்கான அறிவிப்பு இன்று வெளியாவதாக தகவல் வந்துள்ளது.
தலைவர் பதவிக்கு அரசியல் அனுபவமுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர்களும், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய இவர்களில் யாரேனும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் பெண் தலைமைகளை பெரிதும் ஆதரிப்பார்கள் என்கிற கணக்கில், தமிழிசையை போலவே தமிழக பாஜக மாநில தலைவராக வானதி சீனிவாசனை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக நுட்பமான கணிப்பு பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைவர் பதவிக்கான அறிவிப்பு எப்பதான் வரும்..?