ஓட்டுக் கேட்கப் போன திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்! அவிநாசியில் பரபரப்பு!

0
97

திமுக கூட்டணியே ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழகம் முழுவதிலும் பரவலாக பேசப்படுகிறது. அதோடு சாதிமத பேதங்களை வைத்து தமிழகத்தில் கலவரங்களை உண்டாக்கலாம் என்பதே அந்த கூட்டணியின் எண்ணமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் உயர் சாதி பெண்களை இழிவாக பேசியதோடு உயர் சாதி பெண்களை மற்ற ஜாதி இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் போன்ற பல விதமான கருத்துக்களையும் அருவருக்கத்தக்க விஷயங்களையும் தெரிவித்தார். அப்போது தான் சாதி ஒழியும் என்றும் கூட அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு பல காணொளிகளில் கவுண்டர் சமூகத்தை குறிப்பிட்டு கவுண்டர்களில் வெட்டுவோம் கவுண்டச்சிகளை கட்டுவோம் என்று கலவரங்களை தூண்டும் விதமான கருத்துக்களையும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.ஜாதி மதம் போன்ற அமைப்புகளுக்கு கூட்டமைப்பு இருக்கின்ற இந்த நாட்டில் ஜாதி மதங்களை ஒழிக்கப் போகிறோம் என்று தெரிவித்து அதன்வழியாக ஜாதியை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் ஒரு சில அரசியல் கட்சிகள் இதன்மூலம் தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்கி தங்களுக்கு தேவையான அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இதுபோன்று பல்வேறு சமூகங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அந்த சமூக மக்கள் அனைவருக்கும் அவரவர்களுக்கு உண்டான சலுகைகள் போன்றவற்றை அந்த மாநில அரசுகள் கொடுத்து தான் வருகிறது. அதோடு அங்கே சாதிகள் மறுக்கப்படுவதில்லை அதோடு மறக்கப்படுவதில்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் ஜாதியை ஒரு ஆயுதமாக வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பலர் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு சில கட்சிகளுக்கு சாதி இல்லை என்றால் அரசியலே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஜாதியை வளர்க்கிறோம் என்று சொல்வதைவிட ஜாதியை ஒழிக்கப் போகிறோம் என்று தெரிவித்துக் கொண்டு வீணாக மக்களிடையே ஜாதி சண்டை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்கும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யும் ஒரு சில வேலைகள் மிக கீழ்த்தரமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதோடு தமிழகத்தில் இவ்வாறு விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த ஒரு கட்சியை கூட்டணியில் வைத்திருக்கும் எதிர்கட்சியான திமுக தற்போது அந்த கட்சிக்கு ஆதரவாகவே தேர்தல் அறிக்கையும் விட்டிருக்கிறது. அதாவது திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் பணம் ஒரு பவுன் தங்க காசு பரிசு வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல சமூக மக்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் வருவதற்கு முன்னரே தேர்தல் அறிக்கையில் இவ்வாறு சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் உயர்சாதி பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற ஒரு அறிக்கையை கொடுத்திருப்பதும், ஜாதியை வைத்து கலவரம் செய்ய நினைக்கும் சில கட்சிகளை கூட்டணியில் வைத்திருப்பதும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களிடையேயும் திமுக மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில், அவிநாசி பக்கத்தில் கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்த பொதுமக்கள் நாடக காதல் திருமணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படும் திமுகவிற்கு எதிராக ஒன்றுகூடி அந்த கட்சியின் பிரச்சாரத்தை அனுமதிக்கக்கூடாது என்று தடுத்து இருக்கிறார்கள்.ஒரு சமுதாயத்தைச் சார்ந்த பெண்களை திருமணம் செய்வதற்காக வெட்டுவேன் குத்துவேன் என்று தெரிவிக்கும் திமுக கூட்டணி எவ்வாறு எங்களிடம் ஓட்டு கேட்க இயலும் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிவித்துவிட்டு எங்களிடம் போட்டுக் கேளுங்கள் இல்லையென்றால் கிளம்பி விடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.