தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? 

Photo of author

By Mithra

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்?

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணியும், திமுக – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணியும் பிரதான கூட்டணியாக களம் காண்கின்றன. இவை தவிர, மநீம – சமக – ஐஜெகே கூட்டணி, அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் போட்டி போடுகின்றன.

திமுக கூட்டணியில் ஏறத்தால கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு மட்டும் பேச்சுவார்த்தையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட ஒருசில கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், மற்ற கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், டைம்ஸ்நவ் மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து 5 மாநில தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில், மூன்று கேள்விகள் பிரதானமாக கேட்கப்பட்டுள்ளன. அவை…

முதலமைச்சர் பதவிக்கு யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள்?

  • எடப்பாடி பழனிசாமி : 31%
  • முக ஸ்டாலின் : 38.4%
  • சசிகலா : 3.9%
  • கமல்ஹாசன் : 7.4%
  • ரஜினிகாந்த் : 4.3%
  • மருத்துவர் ராமதாஸ் : 2.5%
  • கே.எஸ்.அழகிரி : 1.7%
  • ஓ.பன்னீர்செல்வம் : 2.6%
  • மற்றவர்கள் : 8.2%

பாஜக வழிநடத்தும் நடுவண் அரசால் வாக்காளர்கள் எவ்வளவு திருப்தி அடைந்துள்ளனர்?

  • மிகவும் திருப்தி – 12.07%
  • ஓரளவுக்கு திருப்தி – 22.28%
  • திருப்தி இல்லை – 53.26%
  • தெரியவில்லை/கருத்து இல்லை – 12.39%

பிரதமர் மோடி குறித்து தமிழக வாக்காளர்கள் எவ்வளவு திருப்தி அடைந்துள்ளனர்?

  • மிகவும் திருப்தி – 17.29%
  • ஓரளவுக்கு திருப்தி – 24.35%
  • திருப்தி இல்லை – 51.09%
  • தெரியவில்லை/கருத்து இல்லை – 7.27%

எந்த கூட்டணி எவ்வளவு விழுக்காடு வாக்குகள், எவ்வளவு தொகுதிகள் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி – 158 தொகுதிகள் பிடிக்கும் என்றும், இது கடந்த தேர்தலை விட 60 தொகுதி கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி – 65 தொகுதிகள் பிடிக்கும் என்றும், 71 தொகுதிகள் குறைவு என்றும் தெரிவித்துள்ளனர்.

விழுக்காடு அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 43.2% கிடைக்கும் என்றும், இது கடந்த தேர்தலை விட 3.8% கூடுதல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு 11.6% வாக்குகள் குறைந்து 32.1% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த கருத்துக் கணிப்பில் களத்தில் இல்லாதவர்களின் பெயர்களைக் கொண்டு கேட்டிருப்பதாலும், எந்தெந்த ஊர்களுக்கு சென்று எத்தனை பேரிடம் கருத்து கேட்கப்பட்டது? என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.