செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!

0
154

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அதிக அளவு வந்துகொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்வதால் அவர்களை தொடர்ச்சியாக ஊக்குவிக்க பணிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அவர்களை பள்ளிக்கு வர வைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் மற்ற மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் அதன் தொடர்ச்சியாக நம்முடைய மாநிலத்திலும் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்திருக்கின்கிறார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்திருக்கிறார்..

இது தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனை முடிந்த பின்னர் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் ஆரம்பிக்கப்படும். மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தயார் நிலையில் இருக்கின்றோம். ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அரசின் மானியங்கள் உரிய நபர்களுக்கு சென்று சேரும் விதத்தில் அனைத்து விதமான திட்டங்களும் செயல்படுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து விரைவில் விலக்கு தரப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Previous articleகிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை! சரண்டர் ஆன செந்தில் பாலாஜி!
Next articleகொரோனா தடுப்பூசியை மாற்றி செலுத்தினால் அதிக பாதுகாப்பா? மருந்து தர கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட உத்தரவு