ஜூன் 1 முதல் கோயில்கள் திறப்பு – நிபந்தனைகளை இறுதி செய்த தமிழக அரசு

Photo of author

By Parthipan K

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது 4வது ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கான தளர்வை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூன் 1 முதல் அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள 40,000 கோயில்களில், சில பெரிய கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்காக விதிக்க்படவிருப்பதாக கூறப்படும் நிபந்தனைகள்:

  • நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் மட்டுமே அனுமதி என்ற அடிப்படையில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.
    -பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்
  • கோயில்கள் வாயிலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
    -சமூக இடைவெளியைக் கடை பிடிக்க வேண்டும்
    -கோவிகளை இரண்டு வேளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.