விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்
தமிழகம் முழுவதும் பலத்த மழை பொழிந்தது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது தாம்பரத்தில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை பெய்தது இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது சென்னை சுற்றியுள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் முதல் தென் கிழக்கு வங்கக் கடல் வரை நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நேற்று தமிழகம் முழுவதும் நல்ல மழை பதிவானது இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது அதை ஒட்டியுள்ள வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
குறிப்பாக திருப்பூர் ஈரோடு கோவை நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களும் மிதமானது முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் அக்டோபர் 1 முதல் இன்று வரை சென்னையில் 39 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் அது இயல்பை விட மூன்று சென்டிமீட்டர் அதிகம் எனவும் தெரிவித்தார்.
குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை கொண்டுள்ளதால் லட்சத் தீவு பகுதிக்கு மீனவர்கள் மேலும் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்தார்.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் அமைந்துள்ள பாபநாசம் சேர்வலாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.