TamilnaduGov: இவர்களுக்கெல்லாம் இலவச டேப்லெட்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! 

Photo of author

By Rupa

தமிழகத்தில் அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாக டேப்லெட் வழங்கப்படும் என்று தற்பொழுது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று 33000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. முன்பு இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது.

உலகமே டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் யுகத்திற்கு மாறி வரும் நிலையில் தனியார் பள்ளிகளில் இருக்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள் போலவே தமிழக அரசு தற்பொழுது தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைத்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமாக மாணவர்கள் அனைவரும் கரும்புகை இல்லாமல் ஒலி ஒளி அமைப்புடன் கூடிய திரையின் மூலம் கல்வி கற்கின்றனர். இதன் மூலமாக அவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இது இருக்கின்றது.

மாணவர்களை மட்டும் மாற்றினால் போதாத என்று தமிழக அரசானது அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றியுள்ளது. அதாவது மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு, மாணவர்களின் மதிப்பெண் தொடர்பான தகவல்கள் போன்ற தகவல்களை எமிஸ் என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி அரசு பள்ளி ஆசிரியர்களும் மிஸ் செயலியில் தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து மாறி வரும் டிஜிட்டல் காலத்திற்கு தகுந்த வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களை டிஜிட்டல் யுகத்திற்கு மாற்றும் வகையில் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு டேப்லெட் என்று அழைக்கப்படும் கையடக்க கணினி வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கலகம் மூலமாக 101.48 கோடி ரூபாய் செலவில் ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் 79723 ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து நடப்பு கல்வியாண்டுக்கும் ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி இரண்டாவது முறையாக நடப்பு கல்வியாண்டான 2024 மற்றும் 2025ம் கல்வியாண்டில் ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் 55478 ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை “அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் டேப்லெட்டுகள் வழங்கப்படவுள்ளது.

அதற்கான கொள்முதல் பணிகளை பாடநூல் கழகம் செய்து வருகின்றது. அந்த பணியை வேகமாக செய்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விரைவில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளது.