தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு !!

0
98
#image_title
தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு
இன்று(நவம்பர்1) மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தங்கலான்  திரைப்படத்தின் டீசரை தற்பொழுது இன்று(நவம்பர்1) காலை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
நடிகர் சியான் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார்.
தங்களின் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திரிவோது, டேனியல் கோட்டகெரைன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ள தங்கலான் திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா ரஞ்சித் அவர்களும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா அவர்களும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தங்கலான் திரைப்படம் 2024வது வருடம் ஜனவரி மாதம் 26ம் தேதி பான் இந்தியன் திரைப்படமாக உலக அளவில் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அது கூடவே தங்களின் டீசர் குறித்த தேதியையும் அறிவித்திருந்தது. அதாவது தங்கலான் திரைப்படத்தின் டீசர் நவம்பர் மாதம் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று(அக்டோபர் 31) தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று(நவம்பர்1) இரவு 7 மணிக்கு தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் தீடிரென்று இன்று(நவம்பர்1) காலையில் தங்கலான் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதில் தங்கலான் டீசர் இன்று(நவம்பர்1) காலை 11.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
அதன்படி இன்று(நவம்பர்1) காலை 11.30 மணிக்கு தங்கலான் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. தற்பொழுது தங்கலான் டீசர் இணையத்தில் வைலாகி வருகின்றது. டீசர் மாலை வெளியாகும் என்று அறிவித்துவிட்டு திடீரென்று லாக்கிங் சர்ப்ரைஸாக படக்குழு தங்கலான் டீசலை காலையில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Previous article60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்!
Next articleதீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!