60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்!

0
110
#image_title

60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்!

நடிகர் விஜயகாந்த் 1979 இல் வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 1980 காலகட்டங்களில் கதாநாயகனாக நடித்து பலரின் ஃபேவரைட் ஹீரோவாக திகழ்ந்தார். கிட்டத்தட்ட ரஜினி, கமல் ஆகியோரின் இடத்தை பிடித்தவர். இவர் ராதா, அம்பிகா, பானுப்ரியா, குஷ்பூ, மீனா ,நதியா, சிம்ரன், சௌந்தர்யா உள்ளிட்ட நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அது மட்டும் இல்லாமல் புதிய தீர்ப்பு, சாட்சி, சிவந்த கண்கள், வல்லரசு, வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். ராஜதுரை, பேரரசு வானத்தைப்போல, தவசி, உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்து அசத்தியிருந்தார்.

அதேசமயம் அரசியல் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருக்கிறார். ரமணா உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார். இறுதியாக இவர் விருதகிரி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான சகாப்தம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை தொடங்கி அதில் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். சில காலங்களாக சினிமாவை விட்டு வெளியேறிய இவர் தற்போது உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் கம்பீரமாக தோன்றிய விஜயகாந்த்தின் தற்போதைய நிலை ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் அரசியல் மூலமாக மக்களுக்கு உதவ வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

70, 80 என்பது காலகட்டங்களில் விஜயகாந்த்திற்கு இணையாக நடித்த நடிகர்கள் இன்று வரையிலும் திரையில் கதாநாயகர்களாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தோன்றுகிறார்கள். தங்களின் 50, 60 வயதுகளிலும் இளம் வயது நடிகை உடன் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக நடந்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த்திடம் செய்தியாளர் ஒருவரால் உதாரணத்திற்காக 60 வயதில் 18 வயதில் நடிகையுடன் ஏன் நடிக்கிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜயகாந்த், ” கதாநாயகன், கதாநாயகி என்ற கதாபாத்திரங்கள் மட்டும்தான் இங்கு பார்க்கப்படுகிறது. எனக்கு வயதாகி விட்டதால் பானுப்பிரியா கூட நடித்தால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? பழைய கதாநாயகி என்று தானே சொல்வீர்கள்?” என்று பதிலளித்துள்ளார்.

author avatar
Savitha