திருப்பூர் அருகே கோர விபத்து! டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

0
164

கோவையில் இருந்து நாகராஜ் என்பவர் தன்னுடைய நண்பரான பாலசுப்பிரமணியம் என்பவருடன் 2 சக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், பின்னால் கொச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி பயணமாகி கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத நேரத்தில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் டேங்கர் லாரியின் பின் சக்கரம் 2 சக்கர வாகனத்தின் மீது ஏறி, இறங்கியது. இதில் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த நாகராஜ் என்பவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னால் அமர்ந்திருந்த பாலசுப்பிரமணியம் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சமூக இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்த பகுதியில் இருக்கின்ற அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் டேங்கர் லாரியின் ஓட்டுநர் செந்தில் ராஜிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கு நடுவே விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleபுதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!
Next articleநேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!