நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

0
112

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஆன்லை சூதாட்டத்திற்கு அவசர தடை செய்யும் சட்டம் இயற்றிய தமிழக அரசு கடந்த மாதம் 1-ந் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து, அவசர தடைச்சட்டத்திற்கு பதிலாக நிரந்தர தடைச்சட்டம் கொண்டு வர முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 வை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை, அந்த மசோதா குறித்து சில கேள்விகளை எழுப்பி கடிதம் எழுதினார்.அந்த கடிதத்திற்கு தமிழக அரசு பதிலளித்தது.சட்டத்துறை அமைச்சர் இதுகுறித்து தெரிவிக்கையில், மசோதா தொடர்பான சில விளக்கங்களை கேட்டு ஆளுநர் கடிதம் எழுதினார். அதற்கு பதில் அனுப்பப்பட்டது என தெரிவித்தார். இதனை ஏற்று ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்,

மேலும், அவர் தெரிவிக்கும் போது,மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தயங்குவது ஏன் என தெரியவில்லை எனவும் நேரில் விளக்கம் அளிக்க ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என தெரிவித்தார்.

சட்டசபை கூடி 6 வாரங்களில் அவசர சட்டம் தானாக காலாவதியாகி விடும் அரசியல் சாசன சட்டம் பிரிவு 213 (2) (ஏ)யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை கடந்த மாதம் 17-ந் தேதி கூடிய நிலையில், நேற்றுடன் ஆரு வாரங்கள் நிறைவடியந்தது. இதனால், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 காலாவதியனது.

ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அளித்தும் ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்போது, இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார், அவசர சட்டம் காலாவதியான நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் நடைபெறும் அதனை தடுக்க அரசு என்ன முயற்சிகள் மேற்கொள்லும் எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.