என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி

0
229

என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள டோபரா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் நம்பர் ஒன் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக கருதப்படும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சிக்கு ஏன் அவர் செல்லவில்லை எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டாப்ஸி “என்னை அவர்கள் அழைக்கும் அளவுக்கு என்னுடைய செக்ஸ் வாழ்க்கை ஒன்றும் சுவாரஸ்யமானது இல்லை.” எனக் கூறியுள்ளார். டாப்ஸியின் இந்த நக்கல் கமெண்ட் பாலிவுட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சி பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் பிரபலங்களிடம் எப்போதும் கரண் ஜோஹர் எப்போதும் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை சம்மந்தப்பட்ட கேள்விகளைக் கேட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இதனால் அமீர் கான் போன்றவர்களே கரண் ஜோஹரின் இந்த கேள்விகளுக்கு அதிருப்தி அடைந்துள்ளனர். அதையடுத்து தற்போது டாப்ஸியின் இந்த தாக்குதல் காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் மேல் மேலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Previous articleமுதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!
Next articleபாஜகவின் முக்கிய புள்ளி தூக்கு போட்டு தற்கொலை?..