அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!

0
161

தமிழகத்தில் இருக்கின்ற 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

14 வது ஊதிய பேச்சு வார்த்தையினடிப்படையிலும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கான தேவை மாதத்திற்கு 10 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3,40,00000லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், மீதமுள்ள 6,60,00000 ரூபாயை பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச்சீட்டு மூலமாகவே வசூலிக்க வேண்டும் என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றி சென்று கட்டணங்களை வசூல் செய்து வருமானத்தை அதிகரிப்பதற்கும், நிதிச் சுமையை குறைக்கவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எல்லா மண்டல மேலாளர்களும், இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous articleமருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!
Next articleகலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?