மருந்து மாத்திரைகள் செலவு அதிகமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம் மத்திய அரசு செய்த புதிய ஏற்பாடு!

0
60

இன்றைய துரிதமான வாழ்க்கைச் சூழ்நிலையில் ,சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, உள்ளிட்ட நம்முடைய ஆயுள் வரை பின்தொடர்ந்து வரும் நோய்கள் பல மனிதர்களை பின் தொடர்ந்து வந்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மருந்துகளின் விலையை அறிந்து கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக fharma sahi daam என ஒரு செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நோய்களை முற்றிலுமாக குணப்படுத்த இயலாது. ஆனால் அதே வேளையில், முடிந்த வரையில் அதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள நாம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதை போலவே சாப்பாட்டிற்கு முன்பு அல்லது அதற்கு பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை நம்முடைய வாழ்க்கையில் ஒன்றென கலந்து விட்டது.

ஒருபுறம் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டாலும் கூட, மறுபுறம் அதன் செலவினங்களும் நம்மை சற்றே திக்குமுக்காட செய்கிறது. இதற்கு தீர்வு காணும் விதத்தில் இந்த செயலியை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.

ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் டிவைஸ்களில் பதிவிரக்கம் செய்யலாம்

இந்த செயலியை நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிராண்டட் மருந்துகளுக்கு ஈடாக அதே பண்புகளைக் கொண்ட விலை குறைவான மாற்று மருந்துகளை இந்த செயலியின் மூலமாக நீங்கள் கண்டு கொள்ளலாம்.

மருத்துவரின் பரிந்துரையை வைத்து ஒப்பீடு செய்யலாம்

ஏதாவது ஒரு நோய்க்காக மருத்துவரை அணுகி நீங்கள் ஆலோசனை செய்தால் அவர் சில பிராண்டட் மருந்துகளை தங்களுக்கு பரிந்துரை செய்வதற்கான வாய்ப்புள்ளது. அந்த மருந்துகள் மிக உயர்ந்த விலை கொண்ட வகையாக இருக்கலாம். அத்தகைய நேரங்களில் நீங்கள் இந்த செயலியில் அந்த மருந்துகளின் பெயர்களை தட்டினால் போதும் அதே பண்புகளை கொண்ட விலை குறைவான மாற்று மருந்துகள் தங்களுக்கு பட்டியலிட்டு காட்டப்படும்.

மருந்துகளின் தரம் குறையாது

மருந்துகளில் இருக்கின்ற மூலப்பொருட்கள் என்ன என்பதில் தான் அதன் பண்புகள் இருக்கின்றதே தவிர, அதன் பிராண்டட் பெயர்களில் ஒன்றுமேயில்லை உதாரணத்திற்கு, நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆகுமென்டின் என்ற ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம் இதன் 10 மாத்திரைகள் விலை 200 ரூபாய் ஆகும். ஆனால் இதனை நீங்கள் இந்த செயலியின் மூலமாக வாங்கும் போது 6 மாத்திரைகள் ரூபாய் 50 மட்டுமே

இதேபோல ஆசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் pan d மாத்திரை 15 மாத்திரைகளின் விலை 199 ஆகும். அதுவே மாற்று நிறுவனத்தில் 10 மாத்திரைகளை 22 ரூபாய்க்கு வாங்க முடியும்.