விடிய விடிய ஓடும் டாஸ்மாக் – இழுத்து பூட்டிய வாலிபர் சங்கத்தினர்

0
296
#image_title

விடிய விடிய ஓடும் டாஸ்மாக் – இழுத்து பூட்டிய வாலிபர் சங்கத்தினர்

சேலத்தில் 24 மணி நேரம் விடிய, விடிய செயல்பட்ட மதுபான கடையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இழுத்து பூட்டினர்.

 

சேலம் நகர பேருந்து நிலையம் அருகே தூதுபாய் குட்டைப் பகுதியில் மதுபான கடை ஒன்று 24 மணி நேரமும் விடிய, விடிய செயல்பட்டுக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கூறியும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

விடிய, விடிய செயல்படும் இந்த மதுபான கடை குறித்து காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனவும் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து அறிந்த சேலம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சம்பந்தப்பட்ட மதுபானக் கடைக்கு சென்று, கடையை பூட்டும் படி, கடை ஊழியர்களிடம் கூறினர். ஆனால், கடை ஊழியர்கள் மதுபானக் கடையை பூட்ட மறுப்பு தெரிவித்தனர்.

 

இதையெடுத்து இந்திய ஜனாதிபதி சங்கத்தினர் தாமாக முன்வந்து மதுபானக் கடையை இழுத்து பூட்டினர். பிறகு இது குறித்த அறிந்த அப்போதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைக்கு விரைந்தனர்.

 

 

ஊழியர்களையும் மது பிரியர்களுக்கு, கடையில் இருந்து வெளியேற்றினர். பிறகு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நேரத்தில் மட்டும் மதுபானக் கடை இயக்கபடும் என உறுதி அளித்தனர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.

 

Previous articleதிமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் அறிவிப்பு
Next articleஅண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!