Chennai: மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றும் அவர்களின் இடங்களில் வைத்திருக்கும் குத்தகை காலம் முடிந்தாலும் கண்டிப்பாக அவற்றை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமன் தொட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. ஆனால் அந்த மதுபான கடைக்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் கடையை காலி செய்ய மாட்டேன் என கூறி தகராறு செய்துள்ளார்.
இதனால் டாஸ்மாக் கடை உரிமையாளர் தூண்டுதலின் பேரில் போலீசார், நான் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தேன் என பொய் வழக்கு போட்டு உள்ளார்கள். எனவே என் மீதான வழக்கு ரத்து செய்து மற்றும் என் இடத்தை காலி செய்து தருமாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் அடிப்படையில் வாடகைக்கு இருக்கும் மதுபான கடைகள் அனைத்தும் ஒப்பந்தம் முடிந்தவுடன் உடனடியாக காலி செய்து தர வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த கடையை மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மனுதாரர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மாற்றம் செய்யப்படும் முறை மக்களுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகிறது.