டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

Photo of author

By CineDesk

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

CineDesk

Tasmac shops in Tamil Nadu will now operate only from 12-10 pm. Minister's order...!!!

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் துணை ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். அந்த கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பற்றிய சில விதிமுறைகள் பற்றி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதாவது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப் படவேண்டும். இந்த கால நேரத்தில் எந்த விதமான விதிமீறல்களும் இருக்ககூடாது. இரவு 10 மணிக்கு மேல் கடைகள் திறந்துள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளின் முன்புறம், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். இதை அந்தந்த மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். எந்த கடை ஊழியராவது கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் அவரிடம் அபராதம் வசூலிக்கப் பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் தவிர வேறு இடங்களில் மது விற்பனை செய்ய படவில்லை  என உறுதி செய்ய வேண்டும். அப்படி விற்பனை செய்தால் அதை உடனடியாக  காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகில் இருக்கும் கடைகள் கணக்கெடுக்கப் பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் உள்ள பதிவேடுகள் சரியாக பராமரிக்கப் பட வேண்டும்.

இந்த அனைத்து விதிமுறைகளையும் அதிகாரிகள் சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.