போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா!

Photo of author

By Pavithra

போராட்டத்திற்கு நாள் குறித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள்:! காரணம் இதுதான்! மது கிடைக்குமா!

தமிழகத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் 14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் வரை நிவாரண நிதி வழங்க கோரியும்,பணி நிரந்தரம் குறித்தும், உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் உடன் போராட்டம் நடத்தப்போவதாக டாஸ்மாக் சங்கங்கள் கூறியுள்ளன.

இந்தப் போராட்டமானது வரும், 25-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை,வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர்.மேலும் இந்த இரண்டு மணி நேரம் மட்டும் மது விற்பனை தடை செய்யப்படும் என்றும் டாஸ்மாக் சங்கங்கள் சார்பில் கூறியுள்ளனர்.