இன்றைய ராசி பலன் 24-08-2020 Today Rasi Palan 24-08-2020

0
43

இன்றைய ராசி பலன்- 24-08-2020

நாள் : 24-08-2020

தமிழ் மாதம்: 

ஆவணி 08, திங்கட்கிழமை,

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

காலை 7.30 முதல் 9.00 வரை.

 எம கண்டம்: 

பகல் 10.30 முதல் 12.00 வரை.

குளிகன்:

மதியம் 1.30 முதல் 3.00 வரை,

திதி:

சஷ்டி திதி பகல் 02.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி.

நட்சத்திரம்:

சுவாதி நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு விசாகம்.

அமிர்தயோகம் பகல் 03.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். லக்ஷ்மி நரசிம்மர் – முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வரவை காட்டிலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளுவால் உடல் சோர்வு, மனஉளைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். செலவுகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமத பலன் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

author avatar
Kowsalya