வசூல் வேட்டையை அள்ளிய டாஸ்மாக்! மகிழ்ச்சியில் அரசாங்கம்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணி முன்பே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேறிவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூரியுள்ளது.
அதனால் இன்று விருவிருப்பாக கடைசி பரப்புரை நடைபெற்று வருகிறது.கருத்துகணிப்புகள் இனி வெளியிட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இந்த கடைசி இரு நாளில் மட்டும் ரூ.412 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என தேர்தல் ஆணையர் சத்திய பிரதாசாகு கூறியுள்ளார்.அனைத்து கட்சிகளுன் இந்த ஆண்டு ஆட்சியை பிடிப்பதற்கு இவ்வாறு பல நூதன முறைகளை பின்பற்றி வருகிறது.
அந்தவகையில் ஒரு ஓட்டுக்கு ஆண் என்றால் ரூ.500 பணம் மற்றும் ஒரு கோட்டர் வழங்கப்படும்.அதே தாய்மார்கள் என்றால் ரூ.500 மற்றும் புடவை வழங்கப்படும்.இது தேர்தலின் போது வழங்கப்படும் பாரமரியம் போல் தற்போது ஆகிவிட்டது.அதே போல தான் அதிமுக தலைவர் கு.ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் தொகுதியில் மக்களுக்கு ஏதும் செய்யாமல் வாக்கு கேட்டு வரும்போது மக்கள் விரட்டி அடித்தனர்.அப்போது ஓட்டுக்கு ரூ.1000 என்று புடவைக்கு அடியில் வைத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அதையெல்லாம் கட்டுபடுத்த தேர்தல்ஆணையம் 3 நாட்களுக்கு டாஸ்மாக்களுக்கு விடுமுறை அளித்தது.மூன்று நாட்கள் டாஸ்மாக் விடுமுறை அளித்ததும் மதுவிரும்பிகள் அனைவரும் 1 மாதத்திற்கு தேவையான மதுக்களை வாங்கி கொண்டனர் போல,விடுமுறைக்கும் கடைசி ஓர் நாளில் மட்டும் ரூ,160 கோடி ரூபாய்க்கு மதுக்கள் விற்பனையாகியுள்ளது.தமிழக அரசுக்கு இது நல்ல வருமானம் என அனைவரும் கிண்டல்,கேளி செய்து கூறி வருகின்றனர்.