கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

Photo of author

By CineDesk

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

CineDesk

Tasmak sells alcohol for extra money!! Minister alert!!

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

கோடை காலத்தில், மக்களின்  மின் தேவை அதிகரித்து தான் இருக்கும். இந்த மின் தேவையை சாமாளிக்க, மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது. விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினார். மேலும் ஏற்கனவே சொன்னது போல் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும்,  கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்று கணக்கெடுத்த 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

அதே போல் எந்த மதுபான கடைகளிலாவது கூடுதலாக பணம் பெற்று கொண்டு மதுபானம் விற்பனை செய்கிறார்கள் என்றால், அது எந்த கடை என குறிப்பிட்டு புகார் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை  எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்.

இதே போல் பணம் அதிகம் பெற்று மதுபானம் விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 5.50 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.