அனைத்து வசதிகள் கூடிய டாஸ்மாக்!! ஆனந்த வெள்ளத்தில் குடிமகன்கள்!!

Photo of author

By Vinoth

தமிழக அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பல பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது.  அதனை பல வழிகளில் தடுத்தும், சரி செய்ததும் பாத்தாலும் அந்த பிரச்சனை தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் மதுக்கடைகள் மூட  வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு படிப்படியாக குறைக்கப்படும்  டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தகவல் தெரிவித்தது.

தற்போது டாஸ்மாக் கடைகளில் மது பானம் மீது ரூ.10 அதிகம் பெறப்படுகிறது என தற்போது இருக்கும் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து குடிமகன்கள் புகார் அளித்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்த விற்பனை செய்யும் அனைத்து மதுபனத்திற்க்கும் பில் வழங்கப்பட்டு விற்பனை செய்தால் கூடுதல் தொகை செலுத்த தேவை இல்லை. இந்த திட்டம் தற்போது ராமநாதபுரம், அரக்கோணம் மாவட்டத்தில் நடிமுறையில் உள்ளது. அதனை விரிவுப்படுத்தும் வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்த  அதற்க்கு  உண்டன பணியை முடிக்கும் நிலையில் தமிழக அரக்சு உள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை அமலுக்கு வந்துள்ளது. காஞ்சிரபும், செங்கப்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது, க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் சரியான தொகையை மட்டும் கொடுக்க முடியும், பிரச்சனைகள் வராது. இதனால் மதுபானப் பிரியர்கள் பயனடைவர் என கூறப்படுகிறது.  இனிமேல் செல் போனில் பணம் கையில் மது நாடு நன்றாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.