நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பஞ்ச், ஹாரியர், சஃபாரி, நெக்ஸான் மற்றும் டியாகோ இவி போன்ற மாடல்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றது. ஏனெனில் அடுத்த ஆண்டு முதல் வாகன புகை கட்டுப்பாட்டுக்கான கடுமையான விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது, இதனால் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இது கார்களை வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாகனங்களின் விலை உயர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கூறுகையில் சந்தையில் ஏற்பட்ட உலோகங்களின் விலை உயர்ந்துள்ளது, அந்த செலவின் தாக்கம் உற்பத்தி பொருட்கள் மீது இருப்பதால் வாகனங்களின் விலைகள் உயரக்கூடும். அதேசமயம் பொருட்களின் விலை குறைவதன் உண்மையான தாக்கம் அடுத்த காலாண்டில் இருந்து வரப் போகிறது என்று கூறியுள்ளார். பேட்டரி விலை மற்றும் புதிய விதிமுறைகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப வாகனங்களை வடிமைப்பதற்கு கூடுதல் செலவாகும், வாகங்களின் விற்பனை விலையை உயர்த்தினால் தான் இந்த செலவை நிறுவனம் ஈடுகட்ட முடியும் என்பது நிதர்சனம்.
ஏப்ரல் 1, 2023 முதல் வாகனங்களில் புகை வெளியீட்டை கண்காணிக்கும் வகையில் அம்சம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும், புகை வெளியீட்டின் அளவு அளவுக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த கருவி எச்சரிக்கை செய்யும் அப்போது நாம் வாகனத்தை சர்வீஸுக்கு விட வேண்டும். செமிகண்டக்டர்களுக்கும் மேம்படுத்தப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்படவுள்ளது.