ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
73
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இன்று சந்திர பகவான் காலையில் பகைவர்ண யோகா ஸ்தானத்தில் இருந்து மாலையில் களத்திர ஸ்தானத்திற்கு வருகிறார். ஆகையால் காலையில் ஆற்றல் அதிகரிக்கும். மாலையில் ஒரு சந்தோஷ செய்தி வந்து சேரும்.

குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அருமையாக உள்ளது. வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷ வானில் சிறகடித்து பரப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்தமான சூழ்நிலை விலகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.