ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்!

Photo of author

By CineDesk

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் இன்று சிறப்பாக அமையும். ஏனென்றால் சந்திரன் உங்கள் ராசியில் சாயந்திரம் வரைக்கும் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார்.

அதற்கு அப்புறம் சுப ஸ்தானத்திற்கு வருகிறார். ஆகையால் எடுக்கும் காரியங்களை காலையில் தொடர்வது வெற்றியைத் தரும். அதற்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. சிலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் சற்று காலதாமதம் ஆகலாம். குடும்ப உறவுகள் இன்று அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. வாழ்க்கை துணைவியின் உறவினர் மூலம் தொலைபேசியின் மூலம் நல்ல தகவல்களை சேர்ப்பார்கள். பொருளாதாரம் ஓரளவுக்கு சிறப்பாக உள்ளது. பொருளாதாரம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும் சிலருக்கு இரட்டிப்பாக அமைவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி அடைந்து மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நிற ஆடை அணிந்து விநாயகப் பெருமானை வழிபட்டு வணங்கி வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.