ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்! 

0
191
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்! 

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவுகள் குழப்பமான நிலையில் காணப்படும். கணவன் மனைவி பேசும் வார்த்தைகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் சில பிரச்சனைகள் எழலாம்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் பழி வரலாம் என்பதால் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கவனமாக செயல்படுவது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது மிகவும் நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleமாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது!
Next article2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here