ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! நிதி சிறப்பாக உள்ள நாள்!

Photo of author

By CineDesk

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! நிதி சிறப்பாக உள்ள நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும் நாள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் சந்தோஷம் வந்து சேரும்.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல்களில் எந்தவித குழப்பமும் இல்லை.

உதயகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் சிறப்பாக அமையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான நேரம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் ஆன்மீக விஷயத்தில் நாட்டம் காட்டுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்