ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

0
229
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. நிதி எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் வெளியூர் பிரயாணம் உண்டாக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எந்த குழப்பமும் இல்லாமல் நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! அனுகூலமான நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் சித்திக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here