ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள் !

Photo of author

By CineDesk

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள் !

CineDesk

Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள் !

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைகள் விலகி நன்மைகள் நடக்கும் நாள். ஏழாம் இடத்தில் உங்களுடைய நான்காம் அதிபதி சூரிய பகவான் வந்துள்ளார். ஆகையால் உற்றார் உறவின் இடம் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து நடந்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும்.

சுகாதார செலவுகள் வந்து சேரும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் நீங்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு சாதகமான பணிவாய்ப்புகள் உள்ளது.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக உள்ளது. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு எல்லோரையும் புரிந்து நடக்கக்கூடிய தன்மை உள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி அமையும் நாளாக உள்ளது.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடையை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.