ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!!

0
207

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள். இன்றைக்கு மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சலசலப்பு மாலைக்குப் பிறகு சந்திராஷ்டமம் விலகுவதால் கலகலப்பு நிறைந்து காணப்படும். நிதி மாலைக்கு பிறகு எதிர்பார்க்கலாம். கணவன் மனைவி ஒற்றுமை குறையலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் வந்து சேரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகளை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் கால தாமதம் ஆகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நான் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு சலசலப்பு நிறைந்த நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here