ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும் நாள்!!

0
219
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைத் துணை வரி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து நன்மைகளை செய்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் உங்களுக்கு கை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். அரசியல்வாதிகள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இன்னல்கள் மறையும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். மூத்த வயதை செய்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வதால் மருத்துவச் செலவுகள் குறையலாம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் இணைந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here