உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

0
222
#image_title

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் இந்த கல்லீரானது உள்ளுறுப்புகளிலேயே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய திறமை கொண்டது. மேலும் தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்த உறுப்பு கல்லீரல் என சொல்லப்படுகிறது.

கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவின் செரிமானத்திற்கு தேவையான பை என்ற மிக முக்கியமான நொதியை சுரக்கிறது.கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவை சேகரித்து வைக்கும் இடம் ஆகவும். மேலும் தேவையான கொழுப்பு, புரதம் போன்ற முக்கிய சத்துக்களை செய்யும் இடமாகவும் இந்த கல்லீரல் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றுவது மற்றும் ரத்தம் உறைதல் போன்ற அதிமுக்கிய பணிகளை இந்த கல்லீரல் செய்கிறது.

இந்த கல்லீரல் மாறிவரும் உணவு பழக்கம் கட்டுப்பாடு இல்லாத குடிப்பழக்கம் மரபு சார்ந்த பிரச்சினைகளாலும் பாதிப்படைகிறது. இதன் விளைவாக கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், நீர் கோர்ப்பது கல்லீரலில் கொழுப்பு கட்டிகள் மற்றும் கல்லீரலில் கிருமி தாக்குதல் இதுபோன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகிறது.

இந்த கல்லீரலானது 70% பாதிப்படையும் வரை எந்த ஒரு அறிகுறியும் நம் உடம்பில் தோன்றுவதில்லை இதனால்தான் கல்லீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று கடினமாக ஒன்றாக இருக்கிறது.

பாதிப்பு இருக்கிறது என்றால் அதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது.கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால் வாய கசப்பு ஏற்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு தேவையான பை என்ற பித்தநீரை சுரக்கும். கல்லீரல் பாதிப்படையும் பொழுது அதிக பித்த நீரை சுரக்கும் வாய்ப்பு மிகவும் கசப்பாக இருக்கும்.

மேலும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். கல்லீரல் பாதிப்பு அடையும்போது செரிமான உறுப்புகளின் செயல்களும் முற்றிலும் பாதிப்படைகிறது.

கல்லீரலில் இருந்து தான் பல செரிமான நொதிகள் உற்பத்தி ஆகிறது. இதன் விளைவாகத்தான் தொடர் பசியின்மை, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு இது போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இவ்வாறு தொடர்ந்து பிரச்சினை இருக்கிறது என்றால் இதுவும் கல்லீரல் பாதிப்படைந்துள்ளது என காட்டும் அறிகுறி ஆகும்.

author avatar
Parthipan K