ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
71

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் திருநாளாக இருக்கும். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு திடீரென பயண வாய்ப்புகள் உண்டாக்கலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்விக்கும் சம்பவம் நடைபெறும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகன பழுதுகளால் செலவுகள் வந்து சேரலாம். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். காதலர்கள் கவனமாக இருப்பார்கள்.

கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உற்றார் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் வேகமாக செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு குறையலாம். பொருளாதாரம் முன்னேற்றம் ஓரளவிற்கு திருப்திகரமாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani