ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!!விருந்து மற்றும் கேளிகைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

0
244
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!!விருந்து மற்றும் கேளிகைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிகைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். குடும்ப உறவு ரொம்ப அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். வருமானம் ஓரளவிற்கு வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் நடைபெறும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here