ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

0
299

ஓசியில் டீ கொடுக்க மறுத்த கடைக்காரரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்

மதுரையில் ஓசியில் டீ கொடுக்க மறுப்பு தெரிவித்த டீ கடை உரிமையாளரை 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மாரிமுத்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட போதையில் உள்ள மர்ம கும்பல் ஒன்று, மாரிமுத்துவிடம், இலவசமாக டீ கேட்டுள்ளனர். இதே கும்பல், ஏற்கனவே பல முறை மாரிமுத்துவிடம் இலவசமாக டீ கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து இவ்வாறு ஓசி டீ கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களுக்கு இலவச டீ கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த குடிகார மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த, பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால், கடை உரிமையாளரான மாரிமுத்துவை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டி தப்ப முயர்சித்துள்ளனர்.

தம்பி செல்ல முயன்ற இந்த கும்பலில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கியுள்ளார். அவரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த பொட்டு பிரசாந்த் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மற்ற ஐந்து பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை தொடர்பான் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதமிழக முதல்வர் போலி விளம்பரம் செய்வதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றசாட்டு
Next articleதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுக்கு பயந்து பதற்றத்தில் விளக்கமளித்த திமுக பிரமுகர்! தேசிய அளவில் அசிங்கபட்ட திமுக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here