போக்சோவில் ஆசிரியை கைது!! பெற்றோர் புகார்!!

0
458
Teacher arrested in POCSO!! Parents complain!!
Teacher arrested in POCSO!! Parents complain!!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை என்ற ஊரை சேர்ந்தவர் தேவி (40) இவர் தற்போது துறையூரில் வசித்து வருகிறார். தேவி அவரது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார். மேலும் இவர் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் 10 வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படித்து வருகிறார். சில நாட்களாக அந்த மாணவரின் செயல்களில் மாற்றம் ஏற்படுவதை அவரின் பெற்றோர்கள் கவனித்து வந்தனர்.

படிப்பில் கவனமில்லாமல் இருப்பதும், ஆசிரியர் தேவியிடம் செல்போனில் இரவு அதிக நேரம் பேசுவதையும் கவனித்து வந்தனர். ஆசிரியர் தேவி, மாணவருக்கு இரவு நேரங்களில் பேசி பாலியல் தொல்லை கொடுப்பது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆசிரியர் தேவி மீது காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில், முசிறி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் தேவியை கைது செய்தனர். அந்த மாணவரை குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Previous article8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இணையத்தள சேவை முடக்கம்!! 
Next articleகர்நாடகாவில் ரோடு ஷோ செல்லத் திட்டம்! அடுத்தகட்ட பரப்புரையை தொடங்கும் பிரதமர் மோடி!