ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு! அடுத்த மாதம் நடைபெறும் என தேதி வெளியீடு!

Photo of author

By Parthipan K

ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான கணினி வழித் தேர்வு! அடுத்த மாதம் நடைபெறும் என தேதி வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண் 01/2022 மற்றும் நாள் 07.03.2022 என்பதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டிற்கான கணினி வழித் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அந்த வகையில் அந்த தேர்வானது அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த கணினி வழி தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் அனுமதிச் சீட்டு,தேர்வு மையம் குறிப்பிடும் அனுமதிச் சீட்டு,திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்கள் முன்பாகவே தேர்வர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியான www.trb.tn.nicin ல் தங்களுடைய user id மற்றும் கடவு சொல் போன்றவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.