ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!
வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும்.
இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு தங்கள் பணியிடத்தை மாற்ற விரும்புகிறார்களோ, அந்த இடத்தினை கலந்தாய்வுக்கு முன்னராகவே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதற்காக அவர்களுக்கு 12 இடங்களுக்கான விருப்பப் பட்டியல் இணையதளத்தில் கொடுக்கப் பட்டிருக்கும். இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் விருப்பமுள்ள இடங்களில் இருக்கும் காலியிடங்களை அறிந்து அதனை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த 12 இடங்களை தங்களின் விருப்பப்படி வரிசைப் படுத்தி விண்ணப்பிக்கலாம். இதை தங்களின் செல்போனிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.
இந்த 2022-23 ஆண்டுக்கான பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு மே 8ம் தேதியே நடைபெறுவதாக இருந்தது. சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு, மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மே 4 தேதி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறையும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மே 15ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.