மதுபோதையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான ஆசிரியர் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!!
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உத்தரப்பிரதேச வாரிய தேர்வுக்கான விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு கல்வித்துறையினை சேர்ந்த ஓர் குழு வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த குழுவில் ஆசிரியர் தர்மேந்திரக்குமார் உடன் மற்றொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் இருவர் இருந்துள்ளனர்.
இந்த குழுவோடு வாரணாசி பகுதியை சேர்ந்த போலீஸ் குழுவும் இணைந்து சென்றுள்ளனர். இவர்கள் சென்றப்பொழுது கல்லூரியின் வாசல் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் வாசலுக்கு வெளியே வாகனத்தில் காத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, சந்திர பிரகாஷ் என்னும் காவல் அதிகாரி மதுபோதையில் இருந்துள்ளார். அருகில் இருந்தோரை தொந்தரவு செய்ததோடு புகையிலை கேட்டும் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அங்கிருந்த ஆசிரியர்களும் பணியாளர்களும் இடையூருக்கு ஆளாகியுள்ளனர். இதனை ஆசிரியர் தர்மேந்திர குமார் எதிர்த்து கேள்வியெழுப்பியுள்ளார். இந்த பிரச்சனை முற்றிய நிலையில், காவல் அதிகாரியான சந்திர பிரகாஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியினை எடுத்து சுட்டுள்ளார். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் தர்மேந்திர குமார் படுகாயமடைந்தார். அதன்படி அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுப்பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில், ஆசிரியரின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் சந்திர பிரகாஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை எழுந்துள்ளது. போராட்டங்களும் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் மல்லப்பா பங்காரி, ‘அரசு சார்பில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.