Breaking News

ஆசிரியர்களே உஷார்! மாணவர்கள் மீது கைவைத்தால் இதுதான் தண்டனை!

Teachers beware! This is the punishment for students!

ஆசிரியர்களே உஷார்! மாணவர்கள் மீது கைவைத்தால் இதுதான் தண்டனை!

ஆந்திரப் பிரேதசம் சித்தூர் மாவட்டம் பலமநேரி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஹரீஷ் (14) என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.மேலும் அந்த மாணவரின் கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி ஆங்கில ஆசிரியர் சிவா என்பவர் அந்த மாணவனை அடித்துள்ளார்.ஆசிரியர் அடித்ததில் அந்த மாணவன் காயமடைந்தான். அந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் இது குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனையடுத்து இது குறித்து சித்தூர் மாவட்ட துணை கல்வி அலுவலர் சந்திரசேகர் என்பவர் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்கள்.அவர்கள் மாணவரை அடித்தது குறித்து சக மாணவர்களிடமும் ,ஆசிரியர்களிடமும் கேட்டறிந்தனர்.அப்போது மாணவரை அடித்தது உண்மை என்று தெரியவந்தது.

இந்நிலையில் மாணவனை அடித்த ஆங்கில ஆசிரியர் சிவாவை பணி நீக்கம் செய்வதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தனர்.மேலும் ஆசிரியர் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் மருத்துவ செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்தனர்.இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு துணை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.மாணவனை மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு ஆசிரியர் அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment