
ஆசிரியர்கள் இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது! தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்ட உத்தரவு!
தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.
அந்த வகையில் நீண்ட கால விடுப்பில் உள்ளாவார்கள், நீண்ட காலமாக தகவல் எதுவும் கொடுக்காமல் பள்ளிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் அடிக்கடி விடுப்பில் செல்பவர்கள் என அனைவருடைய விவரங்களையும் கூடிய விரைவில்(deesections@gmail.com) என்ற இ மெயில் மூலம் உடனே அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலமாக விடுப்பில் உள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதனால் தான் தொடக்க கல்வி இயக்கம் ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க தொடங்கி உள்ளது என கூறப்பட்டுள்ளது.
