ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்?
பள்ளிக்கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.அதில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கல்வி படிப்பிற்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் நிரப்பி அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உதவித்தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆணையர்,பள்ளிக்கல்வி ,டிஜிபி வளாகம் ,கல்லூரிச் சாலை சென்னை 06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பாக இந்த உதவித்தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் குறைந்தது பத்து வருடங்கள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும்.மேலும் ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் 7.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் ,தங்களுடைய பணி மற்றும் ஊதிய விவரங்கள் போன்றவைகளை விண்ணப்பித்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.மேலும் ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஆசிரியர்களின் பிள்ளைகளும் இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.