இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஆசிரியையின் அசத்தலான ஐடியா!
நாள் முழுக்க தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் குளிர்சாதன பெட்டியின் தட்டை வைத்து பாடம் எடுப்பது இணையதளத்தில் பரவலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்து வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிகவும் திக்கித் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் குளிர்சாதன பெட்டியின் தட்டை வைத்து ஆசிரியை ஒருவர் படம் எடுத்துள்ளார்.
இரண்டு டப்பாக்களை நிறுத்தி வைத்து அதன்மேல் குளிர்சாதனப் பெட்டியின் தட்டை வைத்து அதன்மேல் தொலைபேசியை வைத்து, கண்ணாடி தட்டின் கீழே புத்தகத்தை வைத்து பாடம் எடுத்துள்ளார்.
நாள் முழுக்க தொலைபேசியை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை மற்றும் மாணவர்கள் தெளிவாக பாடம் கற்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஐடியா . ஆசிரியை பாடம் கற்பிக்கும் புகைப்படமானது சமூக வலைதளத்தில் மிகவும் பரவலாகி வருகிறது.
அனைத்து தரப்பினரும் அந்த ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.