ஆசிரியர் பணி அறப்பணி!! மாணவர்களின் கல்விக்காக பல இன்னல்களை கடந்து அதை நிரூபிக்கும் ஓர் உன்னத ஆசிரியர்!!
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கபடாமல் இருக்க ஆசிரியை ஒருவர் தினமும் 2 ஆறுகளை கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் தூர்பூர் கிராமத்தில் துவக்கப்பள்ளி ஒன்றை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக கர்மிலா தோப்போ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு 2 ஆறுகளை கடந்து சென்று மாணவ மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறார்.
அவருக்கு வேறு வழி இல்லாததால் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு தினமும் பள்ளிக்கு ஆறுகளை கடந்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். இவருக்கு மாவட்ட கலெக்டர் ரிமிஜியூஎஸ் எக்கா பாரட்டியுள்ளார்.
நிச்சயமாக இந்த ஆசிரியை தன் பணியை மிகவும் நேர்மையாக செய்கிறார். இதைபோன்ற விருப்பமான பணியை மற்ற ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். மற்ற ஆசிரியர்களும் தங்கள் பணிக்கு விசுவாசமாக இருந்து சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என கலெக்டர் ரிமிஜியுஎஸ் எக்கா கூறியுள்ளார்.
#WATCH छत्तीसगढ़: बलरामपुर में एक महिला शिक्षक प्रतिदिन नदी पार करके बच्चों को पढ़ाने धौरपुर के प्राथमिक स्कूल जाती हैं।
कर्मिला टोप्पो ने बताया, "यहां मेरे रास्ते में 2 नदी पड़ती हैं जिन्हें पार करके मैं आती हूं। इसके अलावा कोई रास्ता नहीं है। बच्चों के भविष्य के लिए मैं… pic.twitter.com/357Ain1wN1
— ANI_HindiNews (@AHindinews) July 23, 2023