இந்தியா-நியூசிலாந்து 3 வது போட்டியில் அணியில் மாற்றம்!! மீண்டும் அணிக்குள் வருவாரா கே எல் ராகுல்??

Photo of author

By Vijay

இந்தியா-நியூசிலாந்து 3 வது போட்டியில் அணியில் மாற்றம்!! மீண்டும் அணிக்குள் வருவாரா கே எல் ராகுல்??

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது போட்டியில் மீண்டும் கே.எல் ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இதன் மூலம் இந்திய அணி சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வி அடையாத சாதனையை நியூசிலாந்து அணி உடைத்துள்ளது. நியூசிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில்தொடரை கைப்பற்றியது. நடக்கவிருக்கும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. பேட்டிங் மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டிக்கு பின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக துருவ் ஜூரல் விளையாடுவார் என்று தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் இருவரும் இரண்டாவது போட்டியில் விளையாடிய வீரர்கள் மாற்றம் ஏதும் இல்லாமல் மூன்றாவது போட்டியில் விளையாடுவார்கள் என்று முடிவில் இருக்கிறார்கள்.

 

நடக்கவிருக்கும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இத்தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா??